நியூசிலாந்து தமிழர்களிடையே
விட்டமின்
D பற்றாக்குறை – பகுதி1
– Dr. குமார்
கணேசன் ( kga230@gmail.com)
அண்மையில் கிறைச்சேச்
வாழ் தமிழர்கள்
பலர் விட்டமின் D பற்றாக்குறையால்
பாதிக்கப்பட்டிருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் வயது ஒன்றில் இருந்து எழுபது வரை வேறுபடும். இதுவரை
செய்யப்பட்ட
மருத்துவ
சோதனைகளின்
படி (ஏறக்குறைய
10 பேர்) 100% ஆனவர்கள்
விட்டமின்
D பற்றாக்குறையால்
கடுமையாக
பாதிக்கப்பட்டிருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்பானது என்னை
இக்கட்டுரையை
எழுதத் தூண்டியது.
இந்தக்கட்டுரையின் பெரும்பகுதி
THE
HEALING POWER OF SUNLIGHT & VITAMIN D, An exclusive interview with Dr. Michael
Holick-2005 என்ற ஆங்கில கட்டுரையின்
சுருக்கம்
ஆகும்.
Dr. Michael Holick is the
author of “The UV Advantage” and one of the world’s most respected authorities
on vitamin D and the health benefits of natural sunlight.
விட்டமின் D யும் சூரிய
வெளிச்சமும்
பற்றிய நீங்கள் பெரும்பாலும்
அறிந்திராத
பதினைந்து
உண்மைகள்
என்புருக்கி, மனவழுத்தம்(depression), புறஸ்டேட்
ஆண்குறி புற்றுநோய்,
மார்பு புற்றுநோய்,
நீரிழிவு
மற்றும் உடற்பருமன்(obesity)
போன்ற வியாதிகளை
விட்டமின்
D தடுக்கின்றது.
விட்டமின்
D ஆனது விட்டமின்களிலேயே
மிகவும் குறைவாக கவனத்தில்
எடுக்கப்பட்ட விட்டமின் ஆகும். இது இலவசமாக கிடைப்பது
காரணமாக இருக்கலம்.
சூரிய ஒளி(UVB) உங்களது தோலில் படும்போது
உங்கள் உடல் இதனை
உற்பத்தி
செய்கிறது. மருந்துக்
கம்பனிகள்
சூரிய ஒளியை விற்பனை
செய்வதில்லையாதலால் இதன்
மருத்துவ
பலாபலன்கள்
விளம்பரப்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலான
மக்கள் விட்டமின்
D இனதும் உடல் ஆரோக்கியத்தினதும் உண்மையான கதையை அறிந்து
இருப்பதில்லை
என்பதே உண்மை ஆகும்.
- விட்டமின் D ஆனது சூரிய
கதிர்களில்
உள்ள புற
ஊதா கதிர்கள்(UVB) உங்கள்
தோலில் படும்போது
உற்பத்தி
செய்யப்படுகிறது.
- விட்டமின் D ஐ
உற்பத்தி
செய்யத்
தேவையான
புற ஊதாக்கதிர்கள்
சதாரண கண்ணாடியை
ஊடுருவுவதிலை.
இதனால் நீங்கள் காருக்குள்
இருக்கும்
போதோ அல்லது
வீட்டினில்
இருக்கும்போதோ
விட்டமின்
D ஐ பெறப்போவதில்லை.
- தேவையான அளவு விட்டமின்
D ஐ சாப்பாட்டின்
மூலம் பெறுவது என்பது ஏறக்குறைய
சாத்தியமில்லாத
விடயம் ஆகும். விட்டமின்
D ஐ பெறுவதற்கு
சூரிய ஒளியே ஒரேயொரு நம்பிக்கையான
வழியாகும்.
- தேவையான அளவு விட்டமின்
D ஐ பெறுவதற்கு
மாத்திரம்
ஒருவர் பத்து உயரமான கிளாஸ் விட்டமின்
D சேர்க்கப்பட்ட பாலை ஒவ்வொரு
நாளும் அருந்துதல்
வேண்டும்!
- விட்டமின் D ஐ
பெறுவதிற்கு
பூமத்திய
ரேகைக்கு
தூரத்தில்
வசிப்பவர்களுக்கு
நீண்ட நேர சூரிய
வெளிச்சம்
தேவை ஆகும். கனடா,
பிரித்தானியா,
நியூசிலாந்து மற்றும்
அமெரிக்காவினதும்
அவுஸ்திரேலியாவினதும்
பல பகுதிகள்
பூமத்திய இரேகைக்கு
மிக தூரத்தில்
அமைந்த்துள்ளன.
- ஒரே அளவு விட்டமின்
D ஐ பெறுவதிற்கு கருப்புத்தோல்களை
உடையவர்களுக்கு
வெள்ளைத்தோல்களை
உடையவர்களிலும்
பார்க்க
20-30 மடங்கு
அதிக அளவான
சூரிய வெளிச்சம்
தேவையாகும்.
இதனாலேயே
புரஸ்டேட்
புற்றுநோய்
கருப்பினத்தவர்களிடையே
ஒரு கொள்ளை
நோயாக காணப்படுகிறது.
இதற்கு சூரிய வெளிச்சம்
போதாமையே
காரணம் ஆகும்.
- கல்சியம் உள்ளெடுக்கப்படுவதற்கு
போதிய அளவு விட்டமின்
D அதியாவசியமாகும்.
போதிய அளவு விட்டமின்
D இல்லாவிடின்
உங்கள் உடல் கல்சியத்தை
உள்ளெடுக்கமுடியாது
கல்சியம்
விரயமாக்கப்படும்.
- நீண்ட கால விட்டமின்
D பற்றாக்குறையை
ஒரே இரவில்
குணப்படுத்த
முடியாது.
உங்கள் எலும்புகளையும்
நரம்புத்தொகுதியையும்
மீளமைப்பதற்கு
பல மாத
கால விட்டமின்
D மருந்தும்
சூரிய வெளிச்சமும்
தேவையாக
இருக்கும்.
- மிக பலவீனமான
சண்ஸ்கிறீன்
(SPF=8) கூட உங்கள் உடல் விட்டமின்
D உற்பத்திசெய்வதை
95% வீதத்தால்
குறைக்கும்.
- சூரிய வெளிச்சத்தின்
மூலம் அளவுக்கதிகமாக
விட்டமின்
D உற்பத்தி
செய்வது
சாத்தியமில்லை.
உங்கள் உடல் தானாகவே
மட்டுப்படுத்தி
தனக்குத்
தேவையானதை
மாத்திரமே
உற்பத்தி
செய்யும்.
- உங்கள் மார்பெலும்பை
அழுத்தும்போது
நோவு ஏற்பட்டால்
நீங்கள்
நீண்ட கால விட்டமின்
D பற்றாக்குறையால்
இப்பொழுது
பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
- விட்டமின் D ஆனது உபயோகப்படுத்தப்படுமுன்
உங்கள் சிறுநீரகத்தாலும்
ஈரலாலும் தூண்டப்படுகிறது.
- சிறுநீரக நோய்களும்
ஈரல் பாதிப்பும்
உங்கள் உடலில் வ&