மீண்டும் ஒரு
பொழுதாய்
|
மேகலா
இரஞ்சித் :
மேகலா , இரஞ்சித்
ஆகியோர் கன்ரபரி
தமிழ்ச் சங்கத்தின்
நீண்ட கால
உறுப்பினராக
இருந்து தற்போது வெலிங்டனில்
வசித்து வருகின்றனர். |
ஆதவன் நான்
கண்விழித்து
அகிலம் பார்த்தேன்
நித்தம் பார்க்கும்
பூமி முகத்தில்
அன்று மட்டும்
ஏன்
அத்தனை ஜொலிப்பு?
ஆச்சரியமாய் உற்றுப்
பார்த்ததில்
பூமியில் ஆங்காங்கே
வர்ணக்கோலங்கள்
கோலத் தடுப்புக்குள்
பொங்கல் பானைகள்
தலை வாழையிலைப்
படையல்கள்
பால் பழம்
வெற்றிலைகள்
ஆகா அற்புதம் !
என்னதான் நடக்கின்றது
பூமியில்
விழிக்
கிரணங்களை கீழிறக்கி
தெளிவாய்
பார்த்ததில்
வேஷ்டி சால்வையுடன்
ஆண்கள்
புடவை அணிந்து
பொட்டிட்ட
பெண்கள்
பாவாடை தாவணி
அரை கால்சட்டை
சிறார்கள்
பொதுவாய் பேச
தமக்குள்
இனிதாய் ஒரு மொழியென
மங்கலமாய் விழாக்காணுமோர்
இனம் கண்டு
மனமகிழ்ந்தேன்
இனிதான கானங்கள்
காதுகளில்
வந்துவிழ
செவிக்
கிரணங்களை கூர்மையாக்கி
உற்றுக்கேட்டேன்
!! ”நாதத்தோடு
தமிழ் பாடல்கள் பாடி
நம் வீட்டு
முற்றத்தில்
பாற்பொங்கல்
பொங்கி
ஆதவா நினை இன்று
போற்றிட வந்தோம்
அழகுத் திருமுகம்
காட்டி உதிப்பாய்”!!
என் ஒளிக் கிரணங்களெல்லாம்
ஓர் கணம்
மயிர்க் கூச்செறிந்தன
எனக்கு நன்றி
கூறும் ஒரு இனமா ?
அதைக் கூற
என்று ஓரு விழாவா ?
பிறந்ததன் பயனை அடைந்து
விட்டேனா!--?
போதும் போதுமென
தமிழர்கள்
தந்த அன்பு!
அவரின் நன்றி
மறவா நெஞ்சங்கள்!
பாடல்கள்! படையல்கள்!
பால் பழம்
வெற்றிலைகள்!
அனைத்தையும் அள்ளிக்கொண்டு
வீடு வந்தவனுக்கு
இன்று வரை அடங்கவில்லை
ஆச்சரிய மகிழ்ச்சி.
ஆண்டுகள் பல
கடந்துவிட்டன
வாழ்முறைகள் எவ்வளவோ
மாறிவிட்டன
ஆனாலும்
சூரிய வணக்கத்தை
மட்டும் தமிழர் மறந்துவிடவில்லை
பாதிநேரம் அவர்கள்
பதுங்கு குழியில் வாழ்ந்தபோதும்
அகதியாய் சொந்த
நாட்டில்
அந்தரத்தில்
நின்ற போதும்
அமைதிதேடி இடம்பெயர்ந்து
அயல் நாடு
சென்றபோதும்
பொருளாதாரத் தடைநேரம்
வறுமையுற்று
நின்றபோதும்
ஆதவன் எனக்கு
நன்றி சொல்லும் தருணத்தை
தமிழர் மறந்ததேயில்லை
!--இரண்டாயிரத்து
ஆறாம் வருடம் தை மாதம் பதினாலாம்
நாள்--!
மீண்டும் ஒரு
தைப் பொங்கல்!
தமிழர் திருநாள்! சூரிய வணக்கம்!இன்று
ஆண்டாண்டு காலம்
எனை வணங்கும்
தமிழருக்கு
ஆதவன் நான்
நன்றி சொல்ல வேண்டாமோ ?!
அதனால்
பத்தாண்டு
விழாவை சிறப்புடன்
கொண்டாடும்
கன்ரபரி தமிழ்ச்
சங்கம் பெருமையுடன்
பிரசுரிக்கும்
தமிழருவி என்ற
மலரில்
எனது
நன்றி உணர்வைப் பகிர்ந்து
கொள்கிறேன்.
- அன்புடன்
ஆதவன் -
ஆதவனின்
விரல் கிரணங்கள்
பற்றி எழுதியவர்
மேகலா இரஞ்சித்