2004ம் ஆண்டு
நடுப்பகுதியில்
உலக சுகாதார நிறுவனம்,
விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள்,
தடுப்பு மருந்து
தயாரிக்கும் கம்பனிகளின்
பிரதிநிதிகள்
எனப்பலரை ஒன்றுதிரட்டிக்
கூட்டம் ஒன்றை
நடாத்தியது. அடுத்த பாரிய
“கொள்ளை”க் காய்ச்சல்
(pandemic) ஒன்று உலகைத்
தாக்கவுள்ளது
எனும் விடயம் இக்கூட்டத்தில்
எடுத்துச் சொல்லப்பட்டது.
அது
என்ன அடுத்த கொள்ளைக்
காய்ச்சல்?
20ஆம் நூற்றாண்டில்
உலகை மூன்று கொள்ளைக்
காய்ச்சல்கள்
தாக்கியிருக்கின்றன. கொள்ளைக் காய்ச்சல்கள்
இன்புளுவன்சா
வைரஸ்களால் பரவியவையாகும்.
உலகளாவியளவில்
நோய், இறப்பு, சமூக
பொருளாதார அழிவுகள்
என்பவற்றை கொள்ளைக்
காய்ச்சல்கள்
ஏற்படுத்தின. இவை
முறையே,
1918-19, 1957-58, 1968-69 ஆகிய
வருடங்களில் உலகைத்
தாக்கின. இவை முறையே
ஸ்பானியக் காய்ச்சல்,
ஆசியக்காய்ச்சல்,
ஹொங் கொங் காய்ச்சல்
என அறியப் படுகின்றன.
ஆங்கிலத்தில்
pandemic எனும் பதம் கொண்டுள்ள
அர்த்தத்தினைப்
பொதிக்கும் வகையில் இங்கு “கொள்ளை”
எனும் பதம் தமிழில்
தரப்படுகின்றது. புதிய
A வகையான இன்புளுவன்சா
வைரஸ் ஒன்று மனிதர்களிடையே
முதல் முறையாக
பாரதூரமான நோயாக
பாரியளவில் பரவும்
போது அது கொள்ளை
/ pandemic என அழைக்கப்படும்.
1918-1919 காலப் பகுதியில்
ஏற்பட்ட கொள்ளைக்
காய்ச்சல் ஆனது
உலக வரலாற்றில்
மிகவும் மோசமான
அழிவுகளை ஏற்படுத்திய
கொள்ளை நோயாகும். இந்நோயானது
ஏறத்தாழ 20 – 40 மில்லியன்
மக்களைக் காவு
கொண்டது. இத்தகைய
உயிர்ச்சேதமானது
முதலாம் உலகப்போரில்
ஏற்பட்ட அழிவுகளை
விடவும் கூடுதலானதாகும்.
ஸ்பெயின்
முதலாம் உலகப்போரில்
பங்கேற்கவில்லை
என்பதால் இக்காலப்பகுதியில்
அங்கு செய்தித்தடை
எதுவும் இருக்கவில்லை. இதனால் ஸ்பானியப்
பத்திரிகைகள்
இக்காய்ச்சல்
பற்றி போதியளவு
செய்திகளை மக்களுக்கு
வழங்கின. இக்காரணத்தினாலும்,
1918 மே மாதத்தில்
ஸ்பெயினில் 8 மில்லியன்
மக்களை இந்நோய்
பீடித்திருந்ததாலும்
1918-1919 கொள்ளை நோயானது
ஸ்பானியக் காய்ச்சல்
எனவும் அறியப்படும்.
18 மாதங்கள் நீடித்த
இக் கொள்ளை நோய்
உலகெலாம் பரவும்
காலங்களில் அது
எதனால் பரவுகின்றது
என்று மக்களுக்கோ
அல்லது விஞ்ஞானிகளிற்கோ
தெரிந்திருக்கவில்லை.
பசிலஸ் இன்புளுவன்சா
எனப்படும் பக்டீரியா
சார்ந்து தான்
இப்பரவுகை ஏற்படுகின்றது
என நினைத்து அதற்கான
தடுப்பு மருந்தைக்
கண்டுபிடிப்பதில்
விஞ்ஞானவுலகு
ஈடுபட்டிருந்தது.
பின்வந்த காலங்களில்
இது H5N1 வைரசின் ஒரு
ஆரம்பவடிவத்தையுடைய
வைரஸினால் பரவியிருக்கலாம்
என்பதை விஞ்ஞானிகள்
கண்டு பிடித்திருக்கின்றனர்.
இக்காய்ச்சலால்
இலங்கையில் 10,000 பேர் வரையிலும்
நியூசிலாந்தில்
8,000 பேர் வரையிலும்,
இந்தியாவில் 16 மில்லியன்
மக்கள் வரையிலும்
இறந்ததாக அறியமுடிகிறது.
ஆசியக் காய்ச்சலானது1957ல்
சீனாவில் பரவத்தொடங்கி,
பின்னர் உலகெலாம்
பரவி, 1958ல் தடுப்பூசி
கண்டுபிடிக்கப்பட்டதுடன்
கட்டுப்படுத்தப்பட்டது. ஆசியக்காய்ச்சலுக்கு
1 – 4 மில்லியன் மக்கள்
வரை பலியாகினர்.
பறவைகளுடன்
சம்பந்தப்பட்ட
H2N2
எனும் வைரஸினாலேயே
ஆசியக்காய்ச்சல்
பரவியது.
1968-69 காலப்பகுதியில்
பரவிய ஹொங் கொங்
காய்ச்சலானது
மேற்கூறப்பட்ட
H2N2 வைரஸின் ஒரு மாற்றமடைந்த
(mutation) வடிவத்தினாலேயே
பரவியது. இம்மாற்றமடைந்த
வடிவமானது H3N3 என
அழைக்கப்படுகின்றது.
உலகளாவிய
ரீதியில் பரவினாலும் குறிப்பாக ஹொங்
கொங்கையும் அமெரிக்காவையுமே
இக்காய்ச்சல்
தாக்கியது. இக்காய்ச்சலானது
இரண்டு மில்லியன்
மக்களை உலகில்
பலி வாங்கியது.
இம்மூன்று
வகையான காய்ச்சல்களும்
அவற்றின் பரவுகை
முடிந்த பின்னரே
அவை எவ்வகையான
காய்ச்சல்கள்
எனக் கண்டுபிடிக்கப்
பட்டன. ஸ்பானியக்
காய்ச்சலினால்
20-50 வயதுடைய ஆரோக்கியமானவர்களும்,
ஆசிய காய்ச்சலினால்
இளைஞர்கள் மற்றும்
மிகுந்த வயதானவர்களும், ஹொங்கொங்
காய்ச்சலினால்
மிக வயதானவர்கள்
மற்றும் மருத்துவ
கண்காணிப்பில்
இருந்தவர்களும்
கூடுதலாக பாதிக்கப்பட்டனர்.
சமூக, பொருளாதர,
அரசியல் சூழ்நிலைகள் இத்தகைய
மாறுபட்ட விளைவுகளிற்குப்
பங்களித்திருக்கின்றன.
எதிர்காலக்
கொள்ளை வைரஸ் எது?
1997ல்
உருவாகிய H5N1 வகை வைரஸ் எதிர்காலத்தில்
கொள்ளையாகப் பரவக்
கூடிய சாத்தியக்கூறைக்
கொண்டுள்ளதாக
விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனினும் ஏனைய
பறவை சார்ந்த வைரஸுக்களும் (H2N2,
H3N2……) இணையான வாய்ப்புக்களைக்
கொண்டுள்ளன. தற்பொழுது மனிதரிலிருந்து
மனிதரிற்கு இந்த
வகை வைரஸுக்கள்
பரவத்தொடங்கவில்லை.
ஆனால் பறவைகளிலிருத்து
மனிதரிற்குத்
தொற்றுகிறது. உலக சுகாதார
நிறுவனத்தின்
கணிப்பின்படி
இந்த வைரஸ் வகைகளில்
ஒன்று மனிதரில்
இருந்து மனிதரிற்கு
பரவும் கொள்ளை
நோயாக உருவாகும்
வாய்ப்புள்ளது.
எத்தருணத்திலாவது
இவ்வகையான மாற்றம்
நடைபெறலாம். இக்கணிப்பின்படி
உலக சனத்தொகையில்
30% ஆனவர்களை இக்காய்ச்சல்
பீடிக்கும். ஹொங்
கொங் மாதிரியான
ஒரு நாட்டில் தொடங்கிக்
காட்டுத்தீ போன்று
உலகெங்கும் இக்காய்ச்சல்
பரவும் என எதிர்பார்க்கப்
படுகின்றது.
இவ்வாறு வேகமாகப்பரவும்
போது, நிலைமைகளைச்
சமாளிக்கும் வல்லமையற்று
மருத்துவ முறைமைகள்
திண்டாட வேண்டிவரும்
எனவும், மருத்துவத்துறையில்
பணியாற்றுவோரிற்கான
பற்றாக்குறை திடீரென
ஏற்படும் எனவும்,
மருந்துகள் மற்றும்
ஏனைய வசதிகள் யாவும்
சமச்சீரற்ற முறையில்
பங்கிடப்படும்
எனவும் உலக சுகாதார
நிறுவனம் எடுத்துக்கூறுகின்றது.
தற்போதய
நிலமை.
பறவைக் காய்ச்சல்
என்பது பொதுவாக,
பறவைகளைத் தாக்குகின்ற
ஒரு தொற்று நோயாகும். பறவைகளின் வயிற்றில்
இந்த இன்புளுவன்சா
வைரஸுக்கள் பொதுவாக
இருந்தாலும், சில
பறவைகளிடமே அவை
வெளித்தெரியும்
நோயாக உருவெடுக்கின்றன.
ஆகவே பல ஆரோக்கியமான
பறவைகள் காவிகளாகத்
தொழிற்படுகின்றன. வீட்டுப்
பறவைகள் அல்லது
வியாபார நோக்குடன்
வளர்க்கப்படும்
பறவைகளிடையே கூடுதல்
தாக்கத்தை ஏற்படுத்தும்
வைரஸ் பரவுமாயின்
அது வெளிக்காட்டும்
வகையிலான தொற்றுநோயாக, வேகமாகப்
பரவும்.
மேற்கூறிய பறவை
சார்ந்த வைரஸுக்கள்
மனிதரைப் பொதுவாகப்
பாதிப்பதில்லையாயினும், 1997ம் ஆண்டிலிருத்து
அவ்வாறான தொற்று
பண்ணைவைத்திருப்போர்
போன்ற பறவைகளுடன்
நேரடித் தொடர்புடையர்களிற்குப்
பரவத்தொடங்கியுள்ளது.
2003 ஆம் ஆண்டின் கடைசிப்பகுதியிலும்
2004 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும்
ஆசியாவில் H5N1 வைரஸினால்
பாரிய அளவிலான
பறவை/கோழிப்பண்ணைகள்
பாதிக்கப்பட்டன. 2004ம் ஆண்டின் நடுப்பகுதியிலும்
பாரியளவிலான தொற்றுகை
ஆசியாவில் பண்ணைகளில்
ஏற்பட்டன. கம்போடியா,
சீனா, இந்தோனேசியா,
யப்பான், லாவோஸ்,
தென்கொறியா, தாய்லாந்து,
வியட்னாம், மலேசியா,
துருக்கி, கஸகஸ்தான்,
மங்கோலியா, இரஷியா,
ருமானியா ஆகிய
நாடுகள் இதுவரை
பாதிக்கப்பட்டுள்ளன.
100 மில்லியனிற்கும்
மேலான வளர்புப்
பறவைகள் இத்தொற்றுகையைக்
கட்டுப்படுத்துமுகமாக
அழிக்கப்பட்டுள்ளன.
பறவைகளில் இருந்து
மனிதர்களுக்கு
ஏற்பட்ட தொற்றுகையானது
கம்போடியா, தாய்லாந்து,
சீனா, வியட்னாம்
ஆகிய நாடுகளில்
ஏற்பட்டுள்ளது. 147 பேர் இவ்வாறான
தொற்றுகைக்கு
ஆளாகினர். இவர்களில் அரைப்பகுதிக்கும்
மேலானவர்கள் இதனால்
இறத்துள்ளனர்
(78). ஏனையோர்
மருத்துவ உதவியுடன்
குணமடைந்துள்ளனர்.
தற்போது துருக்கியில்
ஒரு நோய்ப் பரவல்
இடம்பெறுவதாக
செய்திகள் வந்த
வண்ணம் உள்ளன.
(இப்புள்ளி
விபரம் 12/01/06 இல் பெறப்பட்டது.
பிந்திய தகவலை
அறிய உலக சுகாதார
தாபனத்தின்-(உ.சு.தா)
இணையத்தளத்தினைப்
பார்க்கவும்
http://www.who.int/csr/disease/avian_influenza/country/en/index.html).
ஆரோக்கியமான
குழந்தைகளையும்
வயதிற்குறைந்த
பெரியோர்களையுமே
இத்தொற்று கூடுதலாகப்
பாதித்துள்ளது.
இன்புளுவன்சா
வைரசுக்கள் விரைவாக
மாற்றமுறும் தன்மையுடையன.
இன்புளுவன்சா
வைரசுக்கள் இலகுவில்
மாற்றமுறக்கூடியன. அதாவது
இலகுவில் தமது
அடிப்படை இழையுருக்களை
மாற்றி வேறுவடிவை
எடுக்கின்றன. இவ்வாறு
மாற்றமுற்றுப்
புதிதாக உருவாகும்
வைரஸானது மனிதரிலிருத்து
மனிதருக்குப்
பரவும் தொற்றாக
உருவாகுமானால்
விரைவாகவும் கட்டுப்படுத்த
முடியாத வகையிலும்
பரவி மேற்குறிப்பிட்ட கொள்ளை
அல்லது பண்டமிக்கை
உருவாக்கும் என்பதே
உ.சு.தா.தின் எச்சரிக்கையாக
உள்ளது.
வரலாற்றுச் சான்றுகளை
அடிப்படையாக வைத்து
ஆராயும் போது ஒரு
நூற்றாண்டில்
மூன்று அல்லது நான்கு
தடவைகள் புதியவகை
வைரசினால் உருவாகும்
இன்புளுவன்சா
கொள்ளைகள் உலகை
பாதிக்கின்றன.
கடுமையான
வகையில் தாக்கும்
பறவையினக் காய்ச்சல்,
குறைந்தளவில்
தாக்கத்தை ஏற்படுத்தும்
வைரசுக்கள் என
இரு பிரதான வவையான
காய்ச்சல்கள்
பறவைகளிடையே ஏற்படுகின்றன. குறைந்தளவிலான
தாக்கத்தை ஏற்படுத்தும்
காய்ச்சல்கள்
பறவைகளிடையே விரைவாகப்
பரவமாட்டா. அவை இறப்பையும்
ஏற்ப்படுத்துவதில்லை.
வெளித்தெரியாமலேயே
பறவைகளை அவை பாதிக்கின்றன.
எனினும் குறைந்தளவு
தாக்கத்தை உருவாக்கும்
வைரசுக்கள் விரைவாக
மாற்றமடைந்து
கூடியளவு தாக்கத்தை
உருவாக்கும் வைரசுக்களாகி
விடுகின்றன. இவ்வாறு
மாற்றமடையும்
வைரசுக்கள் மில்லியன்
கணக்கிலான பறவைகளைத்
தாக்கி இறக்கவைக்கின்றன.
மேற்கூறிய
மாற்றம் ஒருவகையானது. அடுத்தவகையான
மாற்றமானது பறவையினத்திற்கும்
விலங்கினத்திற்கும்
இடையிலான தொற்றுக்கள்
சார்ந்து ஏற்ப்படுவதாகும்.
பறவையினத் தொற்றுள்ள
ஒரு விலங்கிடம்
விலங்கின தொற்றும்
இருக்குமாயின்
இருவகையான தொற்றுக்களை
உருவாக்கும் வைரசுக்கள்
இணையுமானால் புதியவகை
வைரஸ் ஒன்று உருவாகும்.
இப்புதிய வகையான
வைரசானது மனிதரில்
இருத்து மனிதருக்குத்
தொற்றக் கூடியதாக
பாரிய கொள்ளை நோயாக
உருவெடுக்கக்
கூடியன.
வைரசுக்களின்
மாற்றமுறும் தன்மையை
விளங்கிக் கொண்டதால், கொள்ளைக்
காய்ச்சல் பரவுவதை
ஒரு யதார்த்தமான
/ நம்பத்தகு விடயமாக
விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
காய்ச்சலின்
அறிகுறிகள்
உடல்
சூடாதல், உடல்
பலவீனம், வலி,தொண்டை
ப் புண், இருமல்,
கண் வருத்தம்
(Fever, Muscle weakness and/or pain,
Sore throat and cough, Sore eyes -conjunctivitis )
இறப்பை
ஏற்படுத்தும்
காரணிகள்
கடுமையான
வைரஸ் நியூமோனியா,
சுவாச அழுத்தம்,
பல அங்கங்கள் செயலிழப்பு
(Severe viral pneumonia, Respiratory distress syndrome, Multi- organ failure)
மருந்துகள், தடுப்பூசிகள்
தமிஃபுளு
(Tamiflu) எனப்படும் வைரசுக்கெதிரான
மருந்தே தற்பொழுது
பறவைக்காய்ச்சலைக்
குணப்படுத்தப்
பயன்படுகின்றது. இம்மருந்து
மாற்றமடைந்து
உருவாகப் போகும்
வைரசிற்கு எதிராகவும்
பயன்படும் என நம்பப்படுவதால்
இம்மருந்தை பணக்கார
நாடுகள் பெருமளவில்
சேமிக்கத் தொடங்கியிள்ளன.
இம்மருந்தின்
உற்பத்திச்செலவு,
அனுமதி விதிகள்
ஆகியன அதிகமாகவும்
இறுக்கமாகவும்
உள்ளதால் மூன்றாம்
உலக நாடுகள் போதியளவு
கையிருப்பில்
வைக்கமுடியாதுள்ளன.
தமிஃபுளுவின்
குணமாக்கும் திறமை,
பக்கவிளைவுகள்
போன்ற விடயங்களும்
சில சமயங்களில்
கேள்விக்குள்ளாகின்றன.
தமிஃபுளுவிற்கு
குறித்த வைரஸுக்கள்
இயைபாக்கமடைகின்றனவா
எனும் வினாவும்
சில சமயங்களில்
எழுந்துள்ளது.
உருவாகப்
போகும் வைரசின்
தன்மை, விளைவுகள்
ஆகியவற்றைப் பொறுத்தே
தடுப்பூசிகள்
கண்டுபிடிக்கப்படும்
வாய்ப்புகள் உள்ளன. எனினும்
உலகின் பல பாகங்களிலும்
தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான
தயார்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பல தடுப்பூசிகள்
தற்போது பரீட்சாத்த
நிலையில் உள்ளன. பாரியளவிலான
உற்பத்திக்கு
தற்போதய தடுப்பூசி
தயாரிப்பு முறைகள்,
அவை சார்ந்த சட்டங்கள்
அனுமதிப்பதில்லை.
கம்பனிகளும்
பண்டமிக் வருவதற்கு
முன்னால் பாரியளவிலான
உற்பத்தியை மேற்கொள்ள
விரும்பவில்லை.
திட்டமிடுதல்,
கண்காணித்தல்,
கட்டுப்படுத்தல்
இத்தகைய
கொள்ளை நோயை கண்காணிப்பதற்கான நடவடிக்கையை
உ.சு.தா. மேற்கொண்டுள்ளது.
எல்லா நாடுகளையும்
இக்கொள்ளை தாக்குவதைத்
தடுப்பதற்கான
திட்டம் ஒன்றை
உருவாக்குமாறு
உ.சு. தா. வேண்டியுள்ளது.
நியூசிலாந்து
அரசாங்கத்தின்
திட்டமானது கலந்துரையாடலிற்கான
வடிவில் http://www.moh.govt.nz/moh.nsf/0/5F5694E4A5736DD2CC256C55000788A3/$File/influenzapandemicactionplan-v14-nhep-appendix3.pdf
எனும்
முகவரியில் கிடைக்கிறது. உ.சு.தா.
காலப்படிமுறைகளை
அடிப்படையாகக்
கொண்டு எமது நியூசிலாந்து
அரசாங்கமும் தனது
திட்டத்தில் ஆறு
பிரதான காலப்படிமுறைகளையும்
ஏழாவதாக பண்டமிக்கிற்குப்
பின்னான காலம்
என்பதையும் உள்ளடக்கியுள்ளது. தற்பொழுதுள்ள
தமிஃபுளு கையிருப்பானது
21% மான மக்களிற்கு
போதுமானது. தடுப்புமருத்து
கிடைக்கும் காலப்பகுதியில்
நாட்டில் உள்ள
அனைவருக்கும்
அதனை அளிப்பதாகக்
குறிப்பிடப் பட்டுள்ளது.
நிறுவப்பட்டுள்ள
திட்டமிடல் பொறிமுறையானது
மொத்தமாக 33,000 இறப்புகளை
அனுமானிக்கின்றது. திட்டமிடலானது
எல்லைகளை நிர்வகிப்பது,
பாடசாலைகள் ஏனைய
மக்கள்கூடுமிடங்களை
மூடுவது, பயணங்களைக்
கட்டுப்படுதுவது,
வைத்தியசாலைப்
பராமரிப்பை நெறிப்படுத்துவது,
இறந்தவர்களை முறைப்படி
அப்புறப்படுத்துவது
எனப் பல விடயங்களை
உள்ளடக்கியுள்ளது.
கன்ரபரி
மாவட்ட சுகாதார
பணியகத்தினால்
உங்களிற்கு வழங்கப்பட்டுள்ள
குறிப்புத் துண்டில்
அவசரத்தின் போது
என்ன செய்யவேண்டும்
எனும் விடயங்கள்
எடுத்துக்கூறப்பட்டுள்ளன.
0800avnflu அல்லது
286358 எனும் இலக்கங்களைப்
பயன்படுத்தி மேலதிக விபரங்களைப்
பெறலாம்.
www.moh.gov.nz/pandemicinfluenza எனும்
இணையத்தளத்திலும்
மேலதிக விவரங்களைப்
பெறலாம்.
கொள்ளைக் காய்ச்சலின்
உக்கிரமான நேரத்திற்கான
ஆயத்தம்
கொள்ளைக்காய்ச்சலின்
உக்கிரமான நேரத்திற்கான
ஆயத்தமாக ஒவ்வொரு
வீட்டிலும் ஒரு
உயிர்காப்புத்
தொகுதி (survival kit) ஒன்று
இருத்தல் வேண்டும்
என்று நியூசிலாந்து
சுகாதார உத்தியோகத்தர்களினால்
அறிவுறுத்தப்படுகின்றது.
அத்தொகுதியானது
பின்வருவனவற்றைக்
கொண்டிருக்க வேண்டும்.
தனிப்பட்டவகையில்
நாம் என்ன செய்யலாம்.
"All
of life is interrelated... whatever affects one directly, affects all
indirectly" Martin
Luther King
|
இணையத்திலுள்ள
பல்வேறு ஆவணங்களின்
உதவியுடன் இத்தொகுப்பினை
தமிழில் தந்தவர் கமலினி.
|