தமிழ்ச் சங்க வரலாறு என் பார்வையில்! – துளசி கோபால்

  "ஏங்க பத்து வருசம்னு சொல்றது ரொம்பக் காலமா?"

"எதுக்கு இப்படித் திடீர்னு கேக்கறே?  அது எந்த விசயத்துலேன்றதைப் பொறுத்துத்தான் ரொம்ப நாளா இல்லே கொஞ்சநாளான்னு சொல்ல முடியும். வளர்ந்து வர்ற நாட்டைப் பத்தின்னு சொன்னா பத்து வருசம் ன்றது ஒண்ணுமே இல்லை. இதுவே தனிமனுசனைப் பத்தின்னா அது ரொம்பக்காலம்தான். "

துளசி கோபால:  துளசி கோபால் அவர்கள் கன்ரபரி தமிழ்ச் சங்கத்தை 1995 ஆம் ஆண்டு ஆரம்பித்தவர்களில் ஒருவரும், சங்கத்தின் முதலாவது செயலாளரும் ஆகும். இவரது ஆக்கங்களை www.thulasidhalam.blogspot.com என்ற வலைப்பூவில் பார்க்கலாம்.

"ஆமாம். முதல், இடை, கடைன்னு தமிழ்ச்சங்கம் உருவாகி வளர்ந் ுரையம்பதியில் மட்டும்தான் சங்கம் தோன்றி வளர்ந்த வரலாறு இருக்குமா?"

"திரைகடலோடியும் திரவியம் தேடுன்னு மூத்தோர்கள் சொல்லிட்டுப் போயிட்டாங்க. நாம திரவியம் தேடன்னு இல்லாம பல வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வந்திருக்கோமே.  அப்படி வர்றப்ப நம்ம கலை, கலாச்சாரம், மொழின்னு எல்லாத்தையும் கூடவே மனசுலே சுமந்துக்கிட்டு வந்திருக்கோம் தானே?"

"எதுக்கு இந்தப் பீடிகை போடறே? ஏதாவது முக்கியமான விஷயமோ? "

"ஆமாங்க. இது ஒரு குழந்தையைப் பத்தின விஷயம்தாங்க."

"தமிழ்ச்சங்கம்ன்றே, குழந்தைன்றே. ஒண்ணும் புரியலையே! கொஞ்சம் விவரமாச் சொல்லும்மா."

"அதுவந்துங்க... ஒரு பத்து வருசத்துக்கு முந்தி இதே சமயத்துலே நம்மையெல்லாம் ஒரு மீட்டிங் இருக்கு, கட்டாயம் வாங்கன்னு கூப்புட்டாங்களே, ஞாபகம் இருக்கா?"

"ஏன் இல்லாம? ஐலம் ஸ்கூல்லே ஒரு அறையிலே நாம எல்லோரும் கூடுனமே, அதுதானே?"

"இந்த ஊருக்குக் கொஞ்சம் கொஞ்சமா நம்ம தமிழ் ஆட்கள் வரத்தொடங்கிய நேரமுல்லே அது. நமக்காக ஒரு  சங்கம் அமைக்கலாமுன்னுதான் இந்தக் கூட்டத்தைக் கூட்டுனதாச் சொன்னவுடனே எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. "

"ஆமாமாம். ஒரு பதினைஞ்சு பேர் கையெழுத்துப்போட்டு  மனுக்கொடுத்தா ஒரு சங்கம் நிறுவலாம்ன்றதே எனக்கு அப்பத்தான் தெரிஞ்சது. கையெழுத்தைப் போட்டோம். அப்புறம் நம்ம சங்கத்துக்கு ஒரு பேர் வேணாமா?   அதையும் கொஞ்ச யோசனைக்குப் பிறகு தெரிவு செஞ்சாச்சு. கன்ரபரி தமிழ் சொஸைட்டி! பேர் நல்லாதான இருக்குல்லே?"

"அதுக்குத் தலைவர், காரியதரிசி, பொருளாளர்ன்னு தெரிவு செஞ்சோம். எல்லோருமாச் சேர்ந்து எனக்குக் 'காரியதரிசி' பதவி கொடுத்துட்டாங்க. வருசத்துக்கு எத்தனைமுறை நிகழ்ச்சிகள் இருக்குமுன்னு பார்த்தா ஆறுமுறை நடத்தலாமுன்னு முடிவு செஞ்சோமில்லையா? "

"அதான், பொங்கல், தமிழ் வருசப்பிறப்பு, குளிர்காலத்துலே எங்கேயும் வெளியே போகமுடியாமப் போகுதேன்னு அந்தக் காலத்துக்கான ஒரு ஒன்று கூடல், நவராத்திரி விழா, தீபாவளின்னு முடிவு செஞ்சோம். நாம் வசிக்கிற நாட்டோட கலாச்சார நிகழ்ச்சிகளிலேயும் பங்கெடுக்கணுமுன்னு கிறிஸ்மஸ ொண்டாட்டத்தையும் சேர்த்துக் கிட்டோம்."

 "அரசாங்கம் நம்ம சங்கத்தை அங்கீகரிச்சுட்டாங்கன்னு தெரிஞ்சதும் நம்ம முதலாவது ஒன்று கூடல் எதுக்கு, எப்பன்னு உங்களுக்கு நினைவு இருக்கா?"

"ஏன் இல்லாம? தை மாசம் பொறந்தவுடனே பொங்கல் பண்டிகைதான் அது. அன்னைக்கே நம்ம தமிழ்ப் பாடசாலை ஒண்ணும் துவக்கியாச்சு. ஒவ்வொரு ஞாயிறும் ஒரு மணிநேரத் தமிழ் மொழிக்கான வகுப்புகள் ஆரம்பிச்சு நடத்துனோமே! தன்னார்வத் தொண்டா, எல்லோருமே முறை போட்டுக்கிட்டு வகுப்பு நடத்தினது, ஆர்வமோ, ஆர்வக்கோளாற ிட்டத்தட்ட 25 பேருக்குமேலே வகுப்புலே சேர்ந்தது, ஃபிஜித்தீவைச் சேர்ந்த சில இந்தியர்களும் தமிழ்ப்படிக்க வந்ததுன்னு பலதும் நிகழ்ந்துச்சு."

"வீட்டுலே தமிழ்ச்சூழல் இல்லாம, வாரம் ஒரு முறை ஒருமணிநேரம் மட்டுமே தமிழ்ன்னு இருந்த நிலையாலே அந்த ஃபிஜி இந்தியர்கள் மெதுவா பின் வாங்கிட்டாங்க. அதுக்கப்புறம் நம்ம புள்ளைங்களே வகுப்புக்கு வந்துக்கிட்டு இருந்தாங்க. புள்ளைங்க எழுத்துக்கூட்டித் தமிழ்ப் படிக்கறதைப் பார்த்தவுடனே எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு."

" முதல் முறை நடந்த ஒன்று கூடலிலே சில கவிதைகள் வாசிச்சாங்க. ஒரு சம்பிரதாயமா தலைவரின் வரவேற்புரையெல்லாம்  இருந்தது. அதுக்கப்புறம் தமிழ் வருசப்பிறப்புன்னு நினைக்கிறேன், அதுலே சின்னப் புள்ளைங்க 'தீராத விளையாட்டுப்பிள்ளை'ன் ாரதியார் பாட்டுக்கு நடனம் ஆடுனாங்களே. கொஞ்ச நாள் போனவுடனே....."

"எல்லாம் எப்பவுமே சந்தோஷமா இருக்குமோ? குழப்பம் வந்தது, கூடுனோம் அதைத் தீர்க்க. வார்த்தை தடிச்சது, விலகினோம அதைவிட்டு. எல்லாருக்குமே மனசுலே ஒருவிதமான கஷ்டம், இப்படி ஆயிருச்சேன்னு."

"நீங்கதானே அதுக்கும் ஒரு தீர்வு சொன்னீங்க. 'உறுப்பினர்களை ரெண்டு வகைப்படுத்திறலாம். சங்கத்தோட எல்லா நடவடிக்கைக்களுக்கும் ஒத்துப் போகிறவங்கன்னு ஒரு பிரிவு , கலை கலாச்சாரம், தமிழ்ப் பள்ளி இதுக்குமட்டுமே ஆதரவுன்னு  இருக்கறவங்கன்னு இன்னொரு பிரிவா இருந்துக்கலாம். இதுலே கலைக்காக மட்டுமே இருக்கறவங்களுக்கு ஓட்டுரிமை இல்லைன்னு வச்சுக்கலாம்'னு முடிவாச்சு. அதன்படியே மாற்றமெல்லாம் செஞ்சோம்."

"ஆமாம். அப்ப நீங்க காரியதரிசிப் பதவியை விட்டு விலகினது சரிதான். ஓட்டுரிமை இல்லாதவங்க இந்தப் பதவியில் இருக்க முடியாதில்லையா?"

"ஆனா, அதுக்குப் பதிலா கலை,கலாச்சார ஒருங்கிணைப்பாளரா ஒரு புதிய பதவி வந்து ஒட்டிக்கிச்சே. கலை நிகழ்ச்சிகளும் வரவர நல்ல தரத்திலும், பலவகைகளாவும் நடந்துச்சுதான். எனக்கு வேற நிகழ்ச்சிக்காக எங்கே போனாலும், நல்லா இருக்கறதை எப்படியாவது நம்ம ஆக்களும் பார்க்கணுமேன்ன சங்கத்துக்கு ஏற்பாடு பண்ணிக்கொண்டு வர்றதே பொழைப்பாவும் போச்சு. வேறு மொழிக்காரர்களையும் நம்ம ஆட்டத்துலே சேர்த்துக்கிட்டோமுல்லெ?"

"ஆனா, ச்சும்மா சொல்லக்கூடாது. கலைநிகழ்ச்சிகளின் தரம் உயர்ந்துக்கிட்டேதான் போச்சு. வருசாவருசம் புதுக் கமிட்டி, புதுத்தலைவர்கள்ன்னு வந்துக்கிட்டு இருந்தாலும் மாறாமல் இருந்தது உங்க பதவிதான்."

"ஆமாங்க. ஒரு கட்டத்துலே எனக்கே அலுத்துப் போச்சு.நம்ம மக்களிடையே நல்ல திறமை இருக்கறவங்க ஏராளம். இளைஞர்கள் கையில் இந்தப் பொறுப்பு இருந்தால் இன்னும் புதுமையாவும் தரமாவும் இருக்குமுன்னு தோண ஆரம்பிச்சது. இடையிலே ஒருவருசம்  இளைஞர் ஒருவரும் செஞ்சாருதான். ஆனா பழையபடி அடுத்தவருசம் எனக்கேன்னு ஆகிப்போச்சு."

"சங்கம் நல்லாத்தான் நடந்துக்கிட்டு இருந்தது. இதுக்கு நடுவுலே வந்த சுனாமி அலை  சங்கத்துக்குள்ளேயும் புகுந்துருச்சு. கருத்துவேறுபாடு. எதனாலேயாம்? எல்லாம் காசாலே வந்த வினைதான். மக்கள்கிட்டே இருந்து அன்பளிப்பா கிடைச்ச பணத்தை எந் வழியிலே உதவறதுன்றதுலே சிலபல கருத்துக்கள். நோக்கம் என்னவோ உதவறதுதான். அதுலே வேற எண்ணம் இல்லை. ஆனா எப்படி, எங்கேன்றதுதான் இப்பப் பிரச்சனை."

"மனுசன் கண்டு பிடிச்ச ஆயுதங்களிலே ரொம்பப் பொல்லாதது 'வார்த்தை' கள்தான். வாயினால் சுட்ட புண்! ஒரு குடும்பமா இருந்தவங்களைப் பிரிச்சது. 'எரியற தீயிலே எண்ணெய்'ன்னு அப்பப் பார்த்து சங்கத் தேர்தலும் வந்துச்சு. போதாதா? பிளவு பட்டு நிக்குது நம்மத் தமிழ்க் குடும்பம்."

"குடும்பமுன்னு வந்தாலெ இதெல்லாம் சகஜமப்பா..... தண்ணியைத் தடைபோட்டுப் பிரிச்சு வச்சாலும் தடையை எடுத்துட்டா, ஓடிவந்து சேந்துருதுல்லெ? அப்படித்தான் நாமும். இப்ப மனக்கசப்பு. கொஞ்ச நாளுலே அது மறையத்தான் செய்யும். தப்பு நடக்குதுன்னு  நாம  தப்பாப் புரிஞ்சுக்கறோம். கோபம் கண்ணை மட்டுமா மறைக்குது? "

"அதுவுஞ்சரி. எல்லோரும் மொழியாலே ஒண்ணுபட்டவங்களா இருந்தாலும், அவுங்களுக்கு ஏற்பட்ட பலதர அனுபவங்களாலும், வெவ்வேறு குடும்பப் பின்னணியாலும் தனிப்பட்ட சிந்தனையுள்ள மனுசங்கதானே? சண்டை சச்சரவு வந்தா ரெண்டு பக்கமும் கண்டனத்துக்கு ஆளாயிருதுல்லே?"

"இந்தவருசம் நான் சங்கம் சம்பந்தப்பட்ட எந்தப் பதவியும் இல்லாம இருக்கறது, இந்த ரெண்டு தரப்பையும் புரிஞ்சுக்கறதுக்கு இலகுவா ஆயிருச்சு. சங்கத்துலே பெரிய பொறுப்புன்றது உண்மைக்குமே ஒரு தலைவலிதான். ஒரு விதத்துலே பார்த்தா நேர விரயம்தான். ஆனா இப்படித் தாய்நாட்டைவிட்டு வந்துட்ட நமக்கு, நம்ம மக்களோட ஒருசில சமயங்களிலாவது சேர்ந்து நம்ம தாய்மொழியைப் பேசி, பண்டிகைகள் கொண்டாடி, நம்ம இழப்பை ஈடுகட்ட ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித்தர்ற சேவையாத்தான் இதை நினைக்கணும்."

அதுவும் சரிதான். ஆனது ஆச்சு. இனி ரெண்டொரு மாசத்துலே மீண்டும் தேர்தல் வரப்போகுது. பிரிஞ்சிருந்து என்னத்தை சாதிக்கப்போறோம்? இருக்குற கொஞ்சநஞ்ச மக்களும் முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போனா நல்லாவா இருக்கு?

இந்தப் பத்துவருசத்துலே ஒரு புயல் அடிச்சு ஓய்ஞ்சிருக்கு. இனிமே ஒற்றுமையா எல்லாமே நடக்கும், நடக்கணும். நம்பிக்கைதானே வாழ்க்கை!