நான் படித்துச் சிரித்தவை - திருமதி கவிதா தேவானந்

மரகதம்:  எங்கவீட்டு வேலைக்காரி பணம் நகையோட ஓடிட்டா

அம்புஜம்: “அப்படியா உன் கணவரிடம் சொல்லி பொலிசிலே புகார் கொடுக்க     வேண்டியது தானே”

மரகதம்:  “அவ எல்லாத்தையும் எடுத்திட்டு ஓடினதே என் கணவரோட தான்”

-------------------------------------------------------------------------------------------------------

டாக்டர்:    கஸ்டப்பட்டு காப்பாத்தினேனே பீஸ் தரலியே

 

நோயாளி: நீங்கதானே டாக்டர் அந்த ஆண்டவன்தான் காப்பத்தணும் என்னீங்க…… ஆதனால் நான் பீஸை உண்டியல்ல போட்டிட்டன்

 --------------------------------------------------------------------------------------------------------

டாக்டர்:   என்னையா உன் இதயத்திலே பாட்டுச்சத்தம் கேட்குது?

நோயாளி: டாக்டர் நீங்க காதுல மாட்டியிருக்கிறது வாக்மன்

---------------------------------------------------------------------------------------------------------

நோயாளி:  டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் பரொபளம் ஒண்ணும்  வராதே?

டாக்டர்:   நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி   எப்படி ப்ரொபளம் வரும்

----------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர்: கோபு நீ மட்டும் ஏன் ஹோம் வேக் பண்ணலே?

கோபு:   சேர் நான் ஹாஸ்டலே அல்லா தங்கி இருக்கேன்