எனக்கு மிகவும்
பிடித்த கதைப்புத்தகங்கள்
ஜெரொனிமோ
ச்டில்டன்
(Geronimo Stilton Series)
புத்தகங்களாகும்.
இவை இத்தாலியில்
முதலாவதாக
2004ம் ஆண்டு
வெளிவந்தவை.
அங்கு இவை Harry Potter புத்தகங்களை
விட பிரபலம்
என்றும் 35 மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டவை
என்றும் இணையத்தளங்களிலிருந்து
அறிய முடிகிறது.
கடந்த வருடம்
ஒரு லீவு
நாளில் நூலகம் சென்றபோது
முதல் முதலில் 'Four
Mice Deep in the Jungle' என்ற
புத்தகத்தை
கண்டேன். பார்த்ததுமே பிடித்து
விடும் வகையில் அச்சிடப்பட்டிருக்கும்
இப்புத்தகங்களின்
ஒரு பக்கம்
கீழே காண்க.

இக்கதைகள் யாவும் ஜெரொனிமோவை
மையமாகக்
கொண்டு ஜெரொனிமோவாலேயே
எழுதப்படுபவை. நகைச்சுவையானவை. ஜெரொனிமோ ஒரு படித்த, பயந்த, எலிகளுக்கான
பத்திரிகை (The Rodent Gazaette)
ஒன்றை நடத்தும் எலி. அவர்
வாழ்வது
எனக்கு பிடித்த குறும்புக்கார
எலி ட்ராப்
(Trap) ஜெரோனிமோவின்
மைத்துனன். இவர் எப்போதும்
ஜெரொனிமோவிடம்
சேட்டை செய்தபடியே
இருப்பார்.
ட்ராப் 'Cheap
Junk for Less' என்ற
பொருத்தமான
பெயரோடு ஒரு கடை
வைத்திருக்கிறார்.
பெஞ்சமின் என்ற எலிக்குட்டி
ஜெரோனிமோவின்
மருமகன்.
இவர் பாடசாலை
செல்லாத சமயங்களில்
தன் மாமனாரிடம்
செல்வார்.
இவைகளைத் தவிர கதைகளுக்கேற்றபடி
வேறு பாத்திரங்களும்
வந்து போகும்.
ஜெரொனிமோவுக்குப் பயணம் என்றாலே
பிடிக்காது. ஆனால் எல்லா
கதைகளிலும்
அவர் சாகசப்பயணமாக
வெவ்வேறு
இடங்களுக்குச்
செல்ல வேண்டி நேரும். கூடவே அவரது
வீரத் தங்கை தியா,
பகிடிக்கார
ட்ராப், குட்டி மருமகன் பெஞ்சமின்
எல்லோரும்
செல்வார்கள்.
இக்கதைகளில் வரும் பாத்திரங்களின்
பெயர்களே
சிரிப்பைத்
தூண்டும். உதாரணத்துக்கு இவற்றைச்
சொல்லலாம்.
Dr. Shrinkfur and Dr. Furry Feelgood
--- Geronimo's psychiatrists.
Tina Spicytail
--- Geronimo's grandfather's cook and housekeeper.
Walter Worrywhiskers
--- Geronimo's worrywart uncle.
Pawsley Pinhead --- editor-in-chief of
Geronimo's rival newspaper, The Daily Rat.
Rowdyrat Bigtime --- a
worker at Club Mouse.
Ledger Moneymouse --- the manager of Ratlay's
Bank.
Kreamy O'Cheddar ---
The Rodent's Gazette's editor-in-chief.
|
|
|
புத்தகத்தில் கதைக்களத்தைப்
பொறுத்து
தற்போது வரை 23 புத்தகங்கள்
வெளிவந்துள்ளன. கிறைச்சேர்ச் நூலகத்தில்
இவற்றை இரவல் வாங்கிப்
படிக்கலாம்.
நிறநிறமான எழுத்துக்களுடன்
அட்டகாசமாக
இருக்கும்
இந்தப் புத்த்கங்களை
ஒருமுறை படித்துப்
பாருங்கள்.
சிறுவர் மட்டுமல்ல
பெரியவர்களும்
விரும்புவீர்கள்.
ஜெரோனிமோ பற்றிய உபரித் தகவல்கள் ஆங்கிலத்தில்
கீழே தரப்பட்டுள்ளது.
Born in
Stilton was awarded the Ratitzer Prize for his scoop on The Curse of the Cheese
Pyramid. He has also received the Andersen 2000 Prize for Personality of the
Year. One of his best sellers won the 2002 eBook Award
for world's best ratlings' electronic book. His works
have been published in 180 countries.
In
his spare time, Mr. Stilton collects antique cheese rinds and plays golf. But
what he most enjoys is telling stories to his nephew Benjamin.