நான் சிறுமியாக யாழ்ப்பாணத்தில்
இருந்த காலத்தில்
ஒரு நாள்
நான் பாடசாலையால்
வீட்டுக்கு
திரும்பி
வந்த போது
எனக்கு ஒர் ஆச்சரியம் காத்திருப்பதாக
தாத்தா கூறினார். அது
என்ன என்று
கண்டு பிடிக்குமாறு
என்னிடம்
கேட்டார்.
நான் பல பொருட்களை
வரிசையாக
கூறினேன்.
தாத்தா வைத்திருந்த
பொருள் அவற்றில் எதுவும் இல்லை.
|
|
|
லக்கி |
ஒரு உயிருள்ள
பிராணியைத்தான்
தாத்தா எனக்காக வைத்திருந்தார். அது நான்
பல காலமாக
ஆசையாக கேட்டுவைத்திருந்த
ஆனால் பல காரணங்களுக்காக
வாங்கித்தர
மறுத்த நாய்க்குட்டி!
எனக்கு ஒரு நாய்க்குட்டி
கிடைத்திருப்பதை
என்னால் நம்பமுடியவில்லை.
மிகவும் சிறியதாக
இருந்த மண்ணிறமான
அந்த நாய்க்குட்டிக்கு
லக்கி என்று பெயர்
வைத்தேன்.
அன்று முழுவதும்
லக்கியுடன்
விளையாடினேன்.
நான் விளையாட்டு
பொம்மைகளுடன்
விளையாடும்
போது லக்கியும்
சேர்ந்து
விளையாடும். நான் அதற்கு
ஒவ்வொரு நாளும் பால் கொடுப்பேன்.
லக்கி என்னிலும்
எனது சித்தியிலும்
மிகவும் பிரியம் வைத்திருந்தது.
கொஞ்சம் வளர்ந்ததும்
சோறு, இறைச்சி
எனப்பலவகையான
சாப்படுகளை
உண்டது. வளர வளர அதன் குறும்புகளும்
கூடத்தொடங்கின.
|
|
|
ரோசி |
லக்கி ஒரு வயதாக இருந்த
போது நான்
நியூசிலாந்துக்கு
வந்து விட்டேன்.
ஆனால் என்னால்
லக்கியை மறக்க முடியவில்லை.
அம்மம்மா தாத்தாவுடன்
தொலைபேசியில்
கதைகும் போது லக்கி
குரைப்பது
எனக்குக்
கேட்கும்.
லக்கி இப்பொழுது
பெரிய நாயாக வளர்ந்துவிட்டதாம்.
இங்கு எனக்கு
ஒரு நாய்க்குட்டி
வாங்கித்
தருமாறு எனது பெற்றாரை
அரிக்கத்
தொடங்கினேன்.
இந்த தீராத ஆசையின்விளைவாகவோ
என்னவோ, ஆச்சரியமாக
கிறிஸ்மஸ்
அன்று எனக்கு சன்ராவிடம்
இருந்து ஒரு பொமரேனியன்
நாய்க்குட்டி
பரிசாகக்
கிடைத்தது.
அது தான்
scamp my playful pup. அது ஒரு ரோபோ நாய்க்குட்டி.
அதற்கு நான் ரோசி என்று
பெயர் வைத்தேன்.
அது speak என்று
கூறினால்
வவ் வவ்
என்று குரைக்கும்.
Sit என்று கூறினால் நிமிர்ந்து
இருக்கும்.
Howl என்று கூறினால் ஊளையிடும்.
இன்னும் நிறைய
விளையாட்டுகள்
காட்டும்.
இப்பொழுது நான் ரோசியுடன்
ஒவ்வொரு நாளும் விளையாடுகிறேன்.
தற்போதைக்கு ரோசியுடன்
விளயாடுவது
லக்கிமாதிரி
ஒரு நாய்
வளர்ப்பதைவிடவும்
வசதியாக இருக்கின்றது.
ஆனால் நான் இன்னும் லக்கியை மறக்கவில்லை.
என்னிடம்
இப்பொழுது
இரண்டு செல்லப்பிராணிகள்
இருக்கின்றன!