கடந்த மூன்று
தசாப்தங்களாக
ஒக்சிடேட்டிவ்
ஸ்ட்ரெஸ் (Oxidative Stress) தொடர்பான
ஆராய்ச்சிகள்
மிகவும் தீவிரமாக
நடைபெற்று வந்தாலும்
கடந்த 15 வருடங்களாக
ஒக்சிடேட்டிவ்
ஸ்ட்ரெஸ் ஐ எப்படிக் குறைக்கலாம்
எனவும், என்ன
காரணிகள் ஒக்சிடேட்டிவ்
ஸ்ட்ரெஸை கூட்டுகின்றன எனவும்
அறிய பல ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. முதலில்
ஒக்சிடேட்டிவ்
ஸ்ட்ரெஸ்
என்றால் என்ன என்று
பார்ப்போம். சுயாதீன மூலிகங்கள் (Free Radicals) எனப்படும்
ஒரு சக்தி கூடிய
மூலக்கூறுகள்
அல்லது அணுக்கள்
உடம்பில் உருவாக்கப்படுவதால்
ஏற்படும் கலச்
சிதைவு (Cell Damage) என
வரையறுக்கலாம். இதனால் பல நோய்கள்
உருவாகும். தேவையான
அளவு அண்டி
ஒக்சிடெண்ட்
(Anti Oxidant) உடம்பில்
இல்லாமல் போவதன்
விளைவாக கலச்
சிதைவு
ஏற்படுகின்றது.
அண்டி
ஒக்சிடெண்டை, ஒட்சியேற்றத்தைத்
தடுக்கும் இரசாயன மூலக்கூறு
அல்லது பதார்த்தம்
எனலாம். அண்டி
ஒக்சிடெண்ட் இரசாயன பதார்த்தங்களான,
விற்றமின்
C&E, பீட்டா
கரட்டின் (Beta-Carotein),
பொலி
பீனோலிக் (Poly Phenol) போன்ற
மூலக்கூறுகள்
உடம்பைக் கலச்
சிதைவில் இருந்து
பாதுகாக்கின்றன.
இதேபோல் சில நொதியங்கள்
(Enzymes) அண்டி ஒக்சிடன்களாக
தொழிற்படுகின்றன.
இதற்கு உதாரணமாக
Super Oxide Dismutase (SOD) நொதியத்தைக்
கூறலாம்.
95% வீதமான
நோய்கள் உடம்பில்
உருவாகின்ற சுயாதீன
மூலிகங்கள்
ஒக்சிடேட்டிவ்
ஸ்ட்ரெஸை தோற்றுவிப்பதால்
தான் உருவாகின்றன
என்பதை பல ஆராய்ச்சிகள் தெரியப்படுத்தியுள்ளன.
மேலும் சுயாதீன
மூலிகங்கள்
பலவிதமான தாக்கங்களின்
மூலம் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக நாம் சுவாசிக்கும்
காற்றில் உள்ள
ஒக்சிசன் எமது
உடம்பிற்கு தேவையான
ஒரு வாயுவாகும்.
இதைப் பிராண வாயு
என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் இவ்வாயு
இல்லாமல் உயிர்வாழ
முடியாது. அப்படி
இருந்தும் ஒரு
பகுதி பிராண வாயு
சுயாதீன மூலிகங்களாக மாறுகிறது. உதாரணத்திற்கு
சில சுயாதீன மூலிகங்களை நான்
இங்கே கூற விரும்புகிறேன்.
Singlet oxygen, Superoxide, peroxy radical, Hydroxy radical
என்பனவாகும்.
இந்த சுயாதீன
மூலிகங்கள் உடம்பில்
உள்ள புரதம்,
கொழுப்பு மற்றும்
காபோவைதரேற்று
போன்ற பதார்த்தங்களை
தாக்குவது மாத்திரமல்லாது
உடம்பின் மிகமுக்கியமான
DNA, RNA போன்ற மூலக்கூறுகளையும்
தாக்குகிறது. உதாரணமாக DNA மூலக்கூறுகளைத் தாக்குவதால்
புற்றுநோய் போன்ற
உயிர்க்கொல்லி
நோய்களை
உருவாக்குவதிலும்,
கொழுப்பைத்
தாக்குவால் ஏற்படும்
மூலக்கூறுகள்
மாரடைப்பு
போன்ற நோய்களை
உருவாக்குவதிலும்
சமபந்தப்பட்டுள்ளது.
இன்று நாம் எவ்வாறு
ஒக்சிடேற்றிவ்
ஸ்ட்ரெஸைக் குறைக்கலாம்
என்பதைப் பார்ப்போம்.
சுயாதீன மூலிகங்கள் எமது
உடம்பில் ஒவ்வொரு
செக்கனும் உருவாகிக்
கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்த மூலிகங்கள் எவ்வாறு
மற்றைய இரசாயன
பதார்த்தங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதுவே முக்கியமாகும்.
நாம் உண்ணும்
உணவு ஒரு முக்கிய
காரணியாகும். இதைவிட
நாம் உடற்பயிற்சி
செய்வது
மூலம் எமது
உடம்பைத் தூண்டுவதனாலும்
(Stimulate)
உடம்பில் சில
தேவையான நல்ல இரசாயன
பதார்த்தங்களை
உருவாக்கலாம்.
உடற்பயிற்சி
நிலையங்களிற்கு
(Gym) போவதோ அல்லது
இரும்புக் குண்டுகளைத்
தூக்குவதோ அவசியமற்றது.
ஓவ்வொரு நாளும்
20 நிமிட விரைவான
நடைப் பயிற்சியே
சுகதேகியாக உள்ளவர்களுக்கு தொடர்ந்தும்
சுகதேகியாக வாழ
வழி வகுக்கும்.
நான் சிலருடன்
கதைக்கும் போது
கூறுவார்கள் “நான் எவ்வளவோ
நடக்கிறேன் ஆனால்
உடம்பு குறைகிறதில்லை”
என்று. உடம்பில்
10kg மேலதிக நிறையை
கொண்டிருந்தால்
அதைக் குறைக்க
பல நீண்டநேர உடற்பயிற்சியும்,
உணவுக் கட்டுப்பாடும்
தேவை.
மேற்கூறிய
சுயாதீன மூலிகங்களைக் குறைக்க
எவ்வாறான உணவை
உண்ணலாம் எனக்
கேட்டால் மிகவும்
சுருக்கமான பதில்
மரக்கறிகளும்,
பழங்களும்,
இலைவகைளும் என்பதே
ஆகும். இவற்றை
உண்ணுவதால்
சுயாதீன மூலிகங்களுடன் போரிட்டு
அவற்றை இல்லாமல்
செய்யும் சக்தியுடைய
இயற்கையான இரசாயனப்
பதார்த்தங்களான
விற்றமின்கள்
C&E, பீற்றா
கரோட்டின், பொலி பீனோல், ஆகியவற்றை
உள்ளெடுக்கலாம்.
இது தவிர சில
சேதன கந்தகப் பதார்த்தங்கள்
(Organic Sulphur Compounds) உடம்பில்
அண்டி
ஒக்சிடெண்களாக
தொழிற்படும் நொதியங்களை
உருவாக்கத்
தூண்டும். இந்த நொதியங்களே
உடலை முதற்காக்கும்
பொறிமுறை (First Defence
Mechanism) என்று அழைக்கப்படும்.
நாம் உணவால்
எடுக்கும் அண்டி
ஒக்சிடெண்ட் பதார்த்தங்களை
இரண்டாவது ரக
பொறிமுறை (Second Defence
Mechanism) எனக்கூறலாம்.
நியூசிலாந்தில்
வாழும் நாம் இங்கு
கிடைக்கும் சில
பழங்களிலும்,
மரக்கறி வகைகளிலும்
உள்ள அண்டி
ஒக்சிடெண்ட்களைப்
பார்ப்போம்.
விட்டமின் C
அதிக அளவில் கிவிப்
பழத்தில்
உள்ளது.
அடுத்ததாக
தோடம்பழத்தில்
உள்ளது.
அப்பிள், திராட்சைப் பழங்களில்
விட்டமின் C குறைவாகக் காணப்பட்டாலும்
அதிகளவு பலவகையான
பொலி பீனோல்கள் உள்ளது. இதைவிட
கிரான்பெர்ரி
(cranberry),
பிளக்கறண்ட்
(blackcurrent) போன்றவை
விட்டமின் C , பொலி பீனோலகள்
செறிந்த
பழங்களாகும். கரட்டில்
பீற்றா கரோட்டின்
செறிந்து காணப்படுகிறது.
புரோக்கலியில்
(Broccoli) சேதன கந்தகப்
பதார்த்தங்கள்
இருந்தாலும் புரொக்கோலி
ஸ்ப்புரவுட் (
Broccoli sprout) இல் இது பல
மடங்காக உள்ளது.
ஆனால் இது எளிதில்
கிடைப்பதில்லை.
விட்டமின் E விதைகளிலும், தாவர
எண்ணெயிலும்
காணப்படுகிறது.
ஒரு நாளைக்கு
நீங்கள் 20
வகையான உணவுப்
பண்டங்களை உட்கொண்டால்
அது சிறந்த உணவுப்
பழக்கமெனக் கொள்ளப்படும்.
இதில் மிகச்சிறிய
அளவில் சேர்க்கப்டும்
வாசனைத் திரவியங்களும்
வேறு சில பதார்த்தங்களும்
விதிவிலக்காகும்.
உதாரணமாக காலையில்
வீற்பிக்ஸ்
(Weetbix),
முந்திரிகை
வற்றல் (Raisin), முட்டை,
பால் எனக்கூறலாம்.
மதிய உணவாகப் பாண்,
பட்டர்,
சலட், யோகட்,
அப்பிள் ஆகியவற்றைக்
கூறலாம். மாலையில்
தேனீர், பிஸ்கெற், தோடம்பழச் சாறு,
விதைகள் என்பவற்றைக்
கூறலாம். இரவு
சோறு, மரக்கறி,
கீரை, பருப்பு,
இறைச்சி,
அல்லது மீன்
என்பவற்றைக் கூறலாம்.
உண்மையில்
பலவிதமான உணவை
உண்ணும்போது நோய்
எதிர்ப்புச் சக்தியைக்
கூட்டி நோய் வராமல் இருப்பதைத்
தவிர்த்துக் கொள்ளலாம்.
மேலும்
பலவித
உணவிலிருந்து
புதிய இரசாயன
மூலக்கூறுகள்
உடலுறுப்பிற்கு
செல்லும் போது
அவை சில பொறிமுறைகளை
தானாக நடாத்தி
நோய் எதிர்ப்புத்
தன்மையை நன்றாக
வைத்திருக்கும்.
சில உணவுகளை
உங்களால் உண்ண
முடியாமல் போகலாம்.
கவலையை விடுங்கள்.
விற்றமின் C,E போன்றனவும்
பல்வேறு பதார்த்தங்களும்
உங்கள் உடம்பில்
சேமித்து வைத்திருக்கப்படும்.
விற்றமின் C, E இனது அரை
வாழ்வுககாலம்
10 நாளிலும்
கூடவாக
இருப்பதனால் அவை தேவைப்படும்
போது பயன்படுத்தப்படும்.
ஆனால் ஒவ்வொரு
நாளும் ஒரேவகையான
உணவை உண்பதைத்
தவிர்த்துக் கொண்டு
வேறுவிதமான மரக்கறிகள்,
பழங்கள், காபோவைதரேற்று
சத்துக்கு பல்வேறு
அரிசி வகைகள்,
நூடில்ஸ்,
பாண், தோசை,
இட்லி எனச்
சாப்பிடுங்கள்.
கோதுமை மாவை
மாத்திரம் பாவித்து
இன்று பிட்டு,
நாளை இடியப்பம்,
அடுத்தநாள்
றொட்டி என்று சாப்பிடாமல்
வேறுவிதமான தானிய
மாவைப் பாவியுங்கள்.
அரிசி மா, உழுத்தம்மா,
றவை போன்றவற்றைப்
பாவிக்கலாம்.
இந்தக்
கட்டுரையை
வாசித்துவிட்டு
ஒவ்வொரு நாளும்
20 வகையான சாப்பாடு
கேட்டு வீட்டில்
பிரச்சனை வருவதற்கு
நான் காரணமில்லை.
|
கலாநிதி
செந்தி
செந்தில்மோகன்:
இரசாயனவியலில்
கலாநிதிப்
பட்டம் பெற்றுள்ள
செந்தி
அவர்கள்
தற்போது oxidative stress,
antioxidant, biomarkers development ஆகிய
துறைகளில்
ஆராய்ச்சி
செய்யும்
சிரேஷ்ட
விஞ்ஞானியாக
உள்ளார். |