தமிழ்ப் பாடசாலை
ஒருங்கிணைப்பாளர்
என்றமுறையில்
இந்த ஆண்டில்
(2005/06) நடை பெற்ற
முக்கிய நிகழ்ச்சிகள்
மற்றும் தமிழ் பாடசாலையின்
வளர்ச்சி
பற்றி எழுதக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இந்த வருடம்
மொத்தமாக
எட்டு மாணவர்கள்
தமிழ்ப் பள்ளியில்
கல்வி கற்றனர். இவர்களில்
ஆறு மாணவர்கள் சர்வதேச ரீதியில் நடாத்தப்படும்
அரையாண்டுப்
பரீட்சைக்குத்
தோற்றி சிறப்பாக பரீட்சை எழுதினார்கள்.
இறுதி ஆண்டுப்
பரீட்சைக்கு
நான்கு மாணவர்கள்
தோற்றினார்கள்.
அவர்களின் பரீட்சை
முடிவுகள்
விரைவில்
எதிர்பார்க்கப்படுகின்றன.
இவ்வருடம் பிள்ளைகள்
தமிழ் கற்பதில் மிகுந்த ஆர்வத்தை காட்டியதற்கு
முக்கிய காரணம் நவீன கற்பித்தல்
முறையாகும். கணணி மற்றும்
தமிழ் கற்பிற்பதற்கு
ஏதுவான மென்பொருட்கள்
மாணாக்கர்
மத்தியில்
துரித மாற்றத்தினை
ஏற்ப்படுத்தியுள்ளன. இரண்டு
பரீட்சைகளை
ஒரு வருடத்தில்
தோற்றுவது
என்பது ஆங்கிலத்தினை
பிரதான மொழியாகப்
பாடசாலையில்
கற்கும் குறைந்த வயதினரான மாணவருக்கு
கடினமான காரியமாக இருந்தாலும்,
இத்தகைய நவீன கற்பித்தல்
முறையானது
பல வழிகளில்
உதவி புரிந்து,
இலகுவாக்கியதை
பெற்றார்
அறிவார்கள்.
ஆரம்பத்தில் கற்பித்த
ஆசிரியை திருமதி கனகாம்பிகை
கணேசமூர்த்தி
அவர்கள் பல்வேறு முறைகளைப்
பயன்படுத்தி
மாணவரின்
ஆர்வத்தைக்
கூட்டினார். பின்வந்த காலத்தில்
பிரதம தமிழ் ஆசிரியராகக்
கடமையாற்றிய
கலாநிதி குமார் கணேசன் அவர்களே மேற்கூறிய
பல நவீன
முறைகளை அறிமுகப்படுத்தினார். 2004/05 காலப்பகுதியில்
கிடைக்கப்
பெற்ற நிதியுதவியினால்
வாங்கிய மல்டிமீடியா
புறஜெக்டர்,
மென்பொருட்கள்
ஆகியவற்றினதும்,
2005/06 கிடைக்கப்
பெற்ற நிதியுதவியினால்
வாங்கிய மடிக்கணணியினதும்
(notebook) உதவியுடனேயே
மேற்கூறிய
நவீன முறைகளைப்
புகுத்தக்
கூடியதாக இருந்தது.
தமிழ்ப் பாடசாலையில்
இதற்கு முந்திய வருடங்களில்
கடமையாற்றிய
ஆசிரியர்களின்
சேவையை நாம் பாராட்டத்
தவறக்கூடாது. குறிப்பாக திரு.சி.யுகராஜா
அவர்கள் தமிழ்ப் பாடசாலை மாணவர்களிற்கு
காத்திரமான
அத்திவாரத்தினைப்
போட்டுக்
கொடுத்தவர்
என்றால் மிகையாகாது.
சங்கீத ஆசிரியை
திருமதி கஸ்தூரி சுப்பிரமணியம்
அவர்களது
சேவையும்
பாராட்டத்தக்கது. சனி
ஞாயிறு தினங்களில்
அவரின் நேரமின்மை
காரணமாக அவரால் சங்கீத வகுப்புக்கள்
தொடரமுடியாமல்
போனது மாணவர்களின்
துரதிஷ்டமே.
இவ்வாறு பலவழிகளிலும்
பலர் தமிழ்ப்
பள்ளி மாணவரின் வளர்ச்சியில்
பங்காற்றியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும்
எனது நன்றிகள்
உரித்தாகட்டும்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சி மேலும் பல வழிகளில் நடைபெற வேண்டும் என்பதே எனது அவா.